உள்ளூர் செய்திகள்
தொழிற்சாலையில் தீ கொளுந்து விட்டு எரிவதை படத்தில் காணலாம்.
ஓசூர் அருகே மரம் அறுக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
- ரூ. 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது
- மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே உளியாளம் கிராமத்தில், ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமள என்று தொழிற்சாலை முழுவதும் பரவியது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், உரிமையாளருக்கு தகவல் அளித்தனர். மேலும், தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில்,மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் என 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்.