உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
100-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்து, சுமார் 1,25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார முக்கிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுதல், ஆவணம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல், குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்காக 100-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்து, சுமார் 1,25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.