உள்ளூர் செய்திகள்

கலை நிகழ்ச்சி நடத்திய பின்னர் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவ, மாணவிகள்

மாணவர்களின் கலைத்திறன் வளர அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் நுண்கலை சங்கம் துவக்கம்

Published On 2023-01-12 17:33 IST   |   Update On 2023-01-12 17:33:00 IST
  • கலைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
  • சிறப்பு விருந்தினராக நாட்டியமங்கை கலைமாமணி டாக்டர் விசித்ரா பங்கேற்றார்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உற்பட்ட ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில், நுண்கலை சங்கம் துவக்க விழா அத்துறையின் முதல்வர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாணவ, மாணவிகள் இடையே பாரம்பரிய இயல், இசை, நாடகம், நாட்டியம் மற்றும் தற்காப்பு கலைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக நாட்டியமங்கை கலைமாமணி டாக்டர் விசித்ரா பங்கேற்றார். கல்லூரி பொறுப்பு இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் சில்வஸ்டர், பேராசிரியர்கள் குமுதவல்லி, ஜீவா, அபிஜித் முரளி, வசந்த்குமார் உட்பட அனைத்து பிரிவு மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News