உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி வட்டம், கங்கலேரி ஊராட்சிக்குட்பட்ட தவளம் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் களஆய்வு செய்யும் பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

கிருஷ்ணகிரியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்யும் பணி

Published On 2023-08-30 15:41 IST   |   Update On 2023-08-30 15:41:00 IST
  • இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் கடந்த 24.07.2023 அன்று தொடங்கி வைத்தார்.
  • விண்ணப் பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலு வலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி தாலுகா கங்கலேரி ஊராட்சிகு உட்பட்ட தவளம் மற்றும் ஆலப்பட்டிகிராமங்களில் கலைஞர் மகளிர் உரி மைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்ப தாரர்களிடம் கள ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் கே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகளிர் உரிமை திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் கடந்த 24.07.2023 அன்று தொடங்கி வைத்தார்.

விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப் பட்டது.கிருஷ்ணகிரி மாவட் டத்தில் முதற்கட்டமாக 584 ரேஷன் கடைகளில் இருக்கும்குடும்ப அட்டை களுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 74 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக 510 நியாயவிலை கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 05.08.2023 முதல் 16.08.202 வரை நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாமில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 859 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.

இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப் பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவை யேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப் படும். அப்போது விண்ணப் பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலு வலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், வருவாய் ஆய்வாளர் ரமாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துராமன், கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News