வேப்பூர் அருகே 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை:போக்சோவில் கைது செய்து சிறையில் அடைப்பு
- இவரது மனைவி கேரளாவில் தங்கி பணி செய்து வருகிறார்.
- தாய்மாமன், கேரளாவில் உள்ள மாணவியின் தாயிடம் நடந்ததை கூறி உடனே வரவழைத்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி, கோயம்மேடு மார்க்கெட்டில் பணி செய்து வந்தார். இவரது கையில் அடிபட்டதால் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி கேரளாவில் தங்கி பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 5-ம் வகுப்பு பயிலும் மகள் உள்ளார். இந்நிலையில் ெதாழிலாளி, தனது 10 வயது மகளை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போன 5-ம் வகுப்பு மாணவியிடம், அவரது தாய்மாமன் விசாரித்துள்ளார்.
மாணவி நடந்த விஷய ங்களை தாய்மாமனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி யடைந்த தாய்மாமன், கேரளாவில் உள்ள மாணவியின் தாயிடம் நடந்ததை கூறி உடனே வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த தாய், மகளிடம் விசாரணை மேற்கொண்டு நடந்த சம்பவத்தை உறுதி செய்தார். உடனடியாக வேப்பூர் போலீசாரிடம் புகார் செய்தார். போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.