அரைகுறை ஆடையுடன் விவசாயிகள் போராட்டம்
- விவசாயிகள் பல்வேறு ஆர்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- அரைகுறை ஆடையுடன் பட்டை நாமம் போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளை நில பகுகளில் 6-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு ஆர்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் விவசாய உபகரணங்களை வைத்துக்கொண்டு வீடுகளில் கருப்பு கொடி பறக்க விட்டு உத்தனப்பள்ளி ஆர். ஐ. அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுகாலை உத்தனப்பள்ளி ஊராட்சி குகனுர், லாலிக்கல் பகுதி விவசாயிகள் சிப்காட் நில எடுப்புக்கு எதித்து தெரிவித்து தங்கள் நில பகுதியில் கருணை கொலை செய்யுங்கள் என பேனர் வைத்து உள்ளனர்.
சூளகிரி அருகே சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்த்து ஊத்தனப்பள்ளியில் 28-வது நாளாக காத்திருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். அரைகுறை ஆடையுடன் பட்டை நாமம் போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு ஆர். ஐ. அலுவலகத்தில் மனு அளித்தனர்.