ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கல்லணையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் இருக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
பூதலூர்:
கல்லணையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் விடாமல் இருக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசு நிரந்தர தீர்வை மேற்கொள்ள வேண்டியும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரி தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும் தமிழ் விவசாயிகள் சங்கம், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் விவசாயிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல் .ரவி ,தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் சுப்புராஜ் ,தேசிய மக்கள் கட்சி துணைத் தலைவர் ராமமூர்த்தி ,திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னலட்சுமி, தஞ்சை சமூக ஆர்வலர் பனசைஅரங்கன், மக்கள் பாதை அமைப்பின் திருச்சி தங்கவேல், மது ஒழிப்பு போராளி சுந்தர், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சம்சுதீன் , நெல்லை மாவட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி செயலாளர் பாக்கியமுத்துஉள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பச்சை துண்டுஅணிந்து கோஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.