கரடி சாய்த்த வாழைமரம்.
களக்காடு அருகே கரடி அச்சுறுத்தலால் விவசாயிகள் பீதி
- களக்காடு அருகே மஞ்சு விளை பாலம்பத்து பத்து காட்டில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் இரவில் கரடி சுற்றி திரிகிறது. மேலும் கரடி வாழைகளையும் நாசம் செய்து வருகிறது.
- கடந்த 1 வாரத்தில் முருகன் (41), பிரைசன் (45), தங்கராஜ் (50) ஆகியோர்களுக்கு சொந்தமான 150-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகளை கரடி சாய்த்து சேதப்படுத்தி உள்ளது.
களக்காடு, மார்ச். 2-
களக்காடு அருகே மஞ்சு விளை பாலம்பத்து பத்து காட்டில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் இரவில் கரடி சுற்றி திரிகிறது. மேலும் கரடி வாழைகளை யும் நாசம் செய்து வருகிறது.
கடந்த 1 வாரத்தில் மஞ்சு விளை காமராஜ்நகரை சேர்ந்த ராமசாமி மகன் முருகன் (41), மஞ்சுவிளையை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் பிரைசன் (45), தாமஸ் மகன் தங்கராஜ் (50) ஆகி யோர்களுக்கு சொந்தமான 150-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகளை கரடி சாய்த்து சேதப்படுத்தி உள்ளது.
வாழைகள் நாசமானதால் அவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வாழைகள் இழப்பு ஏற்பட்டு உள்ளது. கரடி நடமாட்டத் தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து மஞ்சுவிளையை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் சிம்சோன் துரை, விவசாயி சில்கிஸ் கூறுகையில், மழையையும், வெயிலையும், பனியையும் பாராமல் விவசாயிகள் இரவு பகலாக வயல்களில் பாடுபடுகின்ற னர்.
இதனால் அவர்களுக்கு உடல்நலமும் பாதிக்கப்படும் நிலையும், வனவிலங்கு களால் ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்க தோட்டங் களை சுற்றி சோலார் மின் வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.