உள்ளூர் செய்திகள்

தொழில்பேட்டை திட்டத்திற்கு எதிர்ப்பு-நாமக்கல் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம்

Published On 2023-05-11 07:30 GMT   |   Update On 2023-05-11 07:30 GMT
  • மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறி வித்துள்ளது.
  • மோகனூர் தாலுகாவில், அதிக அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறி வித்துள்ளது. இதற்காக மோகனூர் தாலுகாவில், அதிக அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், பரளி, லத்துவாடி ஆகிய பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடங்களில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சர்வே பணிகளை தொடங்கி உள்ளனர்.

இப்பகுதியில், அதிக அளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், சிப்காட் அமைந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விளை நிலங்கள் பாழ்படும். விவ சாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதால், இந்த திட்டத்துக்கு, அப்பகுதி விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழு ஆரம்பித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, முட்டியிட்டு ஆர்ப்பாட்டம், கறவைமாடு ஒப்படைப்பு போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என, பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு, அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக வளையப்பட்டியில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், விவசாயி கள் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News