உள்ளூர் செய்திகள்

உடன்குடி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, முருங்கை மரங்களை படத்தில் காணலாம்.

உடன்குடி பகுதியில் தென்னை, முருங்கை பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம்

Published On 2023-05-28 08:38 GMT   |   Update On 2023-05-28 08:38 GMT
  • வேளாண்மை துறையில் பதிவு செய்து அரசு சலுகைகள் பெற்று, மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது.
  • தற்போது கமிஷன் கடைகளில் ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.25 முதல் 28 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட பரமன்குறிச்சி, மெஞ்ஞான புரம், செட்டியாபத்து, தண்டுபத்து, சீர்காட்சி, வெள்ளாளன்விளை, லட்சுமிபுரம், நங்கைமொழி உட்பட 18 ஊராட்சி மன்ற பகுதிகளிலும், அதுவும் செம்மணல் மற்றும் வண்டல் மண் நிறைந்தபகுதிகளில் முருங்கை மற்றும் தென்னை பயிரிடுவதில் விவசாயிகள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். வேளாண்மை துறையில் பதிவு செய்து அரசு சலுகைகள் பெற்று, மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது.

தற்போது கமிஷன் கடைகளில் ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.25 முதல் 28 வரையிலும், தேங்காய் ஒரு கிலோ ரூ.26-க்கும் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிக அக்கறை எடுத்து தீவிரமாக பயிரிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News