உள்ளூர் செய்திகள்

முதியவர் கொலை வழக்கில் விவசாயி கைது

Published On 2023-10-16 10:20 GMT   |   Update On 2023-10-16 10:20 GMT
  • நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்தாக கூறப்படுகிறது.
  • ஆத்திரத்தில் கைலாசத்தை பிடித்து ஜெயராமன் கீழே தள்ளியுள்ளார்.

திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குளமங்கலம் ஐவுளித்தெருவை சேர்ந்தவர் கைலாசம் (வயது 75). இவருக்கு இந்திரா என்ற மனைவியும், கோமதி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று கைலாசம், அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மாடுகளை மேய்த்துக்கொண் டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெயராமன் (45), என்பவரது நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்தாக கூறப்படுகிறது. இதனால் கைசாலத்திற்கும், ஜெயராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் கைலாசத்தை பிடித்து ஜெயராமன் கீழே தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வயலில் விழுந்த கைலாசம் மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் கைலாசத்தை மீட்டு, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கைலாசத்தை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

இச்சம்பவம் குறித்து கைலாசத்தின் மகள் கோமதி ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜெயராமனை போலீசார் தேடி வந்தார். இந்நிலையில் இன்று காலையில் ஜெயராமனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News