உள்ளூர் செய்திகள்

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், ஒரு மாணவிக்கு கண் கண்ணாடி வழங்கியபோது எடுத்த படம்.

கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பாவூர்சத்திரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள்

Published On 2023-03-11 13:48 IST   |   Update On 2023-03-11 13:48:00 IST
  • கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் 126 மாணவிகளுக்கு கண்கண்ணாடி வழங்கப்பட்டது.

தென்காசி:

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பள்ளி சிறார்களின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தலைமை தாங்கினார்.

வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் சாக்ரடீஸ், சுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி வரவேற்றார்.

இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கண்குறைபாடு கண்டறிந்த 126 மாணவிகளுக்கு கண்கண்ணாடிகளை வழங்கினர் 

Tags:    

Similar News