உள்ளூர் செய்திகள்

நீர்நிலைகளில் வெடிகளை வீசிமீன் பிடித்தால் கடும் நடவடிக்கை

Published On 2023-04-25 09:39 GMT   |   Update On 2023-04-25 09:39 GMT
  • மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு மீன்படி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
  • அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாத மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியில் மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு மீன்படி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீன்படி உரிமம் பெற்ற வர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அனும திக்கப்பட்ட நேரங்களில் மீன் பிடித்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாத மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைப் பகுதி களைத் தவிர பிற பகுதிகளான காவிரி ஆற்றங்கரை, சரபங்கா உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைப் பகுதி களில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன் பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்களைப் பிடிக்க தூண்டில், மீன் வலைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துகின்றனர். நீர்நிலைப் பகுதிகளில் சிலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் வெடி மருந்துகள் அடங்கிய பொருட்களைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதாக தகவல் வரப்பெறுகிறது. இவ்வா றான வெடிப்பொரு ட்களைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் யாரேனும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் வெடிப்பொருட்களையோ அல்லது தடை செய்யப்பட்ட மீன் வலைகளையோ பயன்படுத்தி மீன் பிடித்தால் அவர்கள் மீது காவல் துறை யின் மூலம் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். மேலும், அனுமதியின்றி வெடிப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்தோ, சட்டத்திற்குப் புறம்பான வகையில் மீன் பிடிப்பவர்கள் குறித்தோ, மீன்வளத்துறை உதவி இயக்குநரை 04298 - 244045 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கோ அல்லது 0427 - 2452202, 2450498, 2417341 ஆகிய தொலைபேசி எண்களிலோ, வருவாய் துறை அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News