உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் மாலை நேர உழவர் சந்தை

Published On 2022-08-03 09:54 GMT   |   Update On 2022-08-03 09:54 GMT
  • அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
  • உழவா் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில், அமைக்கப்பட்டுள்ள மாலை நேர உழவா் சந்தையை மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலையில் அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-இந்த மாலை நேர உழவா் சந்தையில் நீலகிரி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலமாக உருவாக்கப்பட்ட உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், இதர உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் தங்களது பொருள்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாலை நேர உழவா் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.இங்கு உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், வெல்லம், காளான், நாட்டுக் கோழி முட்டை, மகளிா் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் போன்ற பொருள்கள் விற்பனை செய்யப்படும்.

ஊட்டி உழவா் சந்தையில் மாலை வேளையில் கடை வைக்க விருப்பமுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தங்களது விருப்ப மனுவை வேளாண் துணை இயக்குநரிடமோ அல்லது ஊட்டி உழவா் சந்தை நிா்வாக அலுவலரிடமோ சமா்ப்பிக்கலாம்.இதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, வேளாண் வணிக துணை இயக்குநா் சோபியா, ஊட்டி நகராட்சி கமிஷனர் காந்திராஜன், நகா்மன்ற உறுப்பினரும் தி.மு.க. நகர செயலாளருமான ஜாா்ஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News