உள்ளூர் செய்திகள்

கொங்கர்குளம் கண்மாயை ஆக்கிரமித்து படர்ந்துள்ள முட்புதர்கள்.

மழை பெய்தும் பலனில்லை : நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாயை ஆக்கிரமித்த முட்புதர்கள்

Published On 2023-10-12 11:49 IST   |   Update On 2023-10-12 11:49:00 IST
  • போதிய பராமரிப்பு இல்லாததால் கண்மாயில் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
  • கழிவுநீரை கண்மாயில் விடுவதால் சாக்கடை நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் மழை பெய்தும் பலனில்லாமல் போகிறது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கொங்கர்குளம் கண்மாய் சுமார் 150 ஏக்கர் சுற்றளவு கொண்டதாகும். இந்த கண்மாயில் தேங்கும் தண்ணீர் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் கண்மாயில் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வெளியேறும் கழிவுநீரை கண்மாயில் விடுவதால் சாக்கடை நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் மழை பெய்தும் பலனில்லாமல் போகிறது.

மழைநீர் செல்ல வழியின்றி சாலைகளில் வீணாக செல்கிறது. மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கண்மாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். மழை நீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News