உள்ளூர் செய்திகள்
இ.எஸ். தொழில் நுட்ப கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கிகரிக்கப் பட்ட வேலை வாய்ப்புடன் கூடிய 3 மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
- 45 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம்:
விழுப்புரம்வழுத ரெட்டி யில் உள்ள இ.எஸ். தொழில் நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கிகரிக்கப் பட்ட வேலை வாய்ப்புடன் கூடிய 3 மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர்ந்து படிக்கும் அனைவரும் வேலை வாய்ப்புபெறலாம் என்று கல்லூரியின் தாளா ளர் செந்தில்குமார் தெரி வித்தார். முழுமையாக பயிற்சி முடித்த மாணவர்க ளுக்கு தமிழக அரசின் சான்றிதழ்வழங்கப் பட்டு வேலை வாய்ப்பு பெற்றுத்தர படும். இருச்சக்கர வாகனம் பழுது பார்த்தல், உதவி எலெக்ட்ரீசியன் பணிக ளுக்கு பயிற்சி அளிக்கப்படு கிறது.10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.