உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

Update: 2022-10-07 07:09 GMT
  • காஞ்சிக்கோயில் அடுத்துள்ள எல்.எம்.எஸ். வீதி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி சக்திவேல் ரோட்டில் விழுந்தார்.
  • இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு மயக்கமாக இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில், செங்காளிபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று சக்திவேல் காஞ்சிக்கோவிலுக்கு சொந்த வேலையாக சென்று விட்டு செங்காளி பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

காஞ்சிக்கோயில் அடுத்துள்ள எல்.எம்.எஸ். வீதி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார்.

இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு மயக்கமாக இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்திவேல் இறந்து விட்டதாக கூறினர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News