உள்ளூர் செய்திகள்

வயிற்று வலியால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-10-25 13:02 IST   |   Update On 2023-10-25 13:02:00 IST
  • ஹேமலதா வீட்டின் உள்ளே சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டுக்கொண்டார்.
  • அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மாபேட்டை:

ஈரோடு அம்மாபேட்டை அருகே குதிரைகல்மேடு பகுதி யைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

இவரது மனைவி ஹேம லதா (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள னர். ஹேமலதா கடந்த சில நாட்களாக வயிற்று வலி யால் அவதிப்பட்டு வந்த தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்ப வத்தன்று ஹேமலதா தனக்கு வயிற்று வலி என்று கணவரிடம் கூறியதால் அருண்குமார் மெடிக்கலுக்கு சென்று மாத்திரை வாங்கி வர சென்றார்.

அப்போது வீட்டில் தனி யாக இருந்த ஹேமலதா வீட்டின் உள்ளே சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டுக்கொண்டார். இதையடுத்து வீட்டிற்கு வந்த அருண்குமார் மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்க த்தினர் உதவியுடன் ஹேமல தாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹேமலதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News