உள்ளூர் செய்திகள்

சாலையின் ஓரத்தில் உள்ள ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

Published On 2023-11-26 12:29 IST   |   Update On 2023-11-26 12:29:00 IST
  • சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் பெரிய பள்ளம் உள்ளது.
  • இதனால் சில இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.

பெருந்துறை:

பெருந்துறை சிப்காட்டில் இருந்த பெருந்துறை நகருக்கு வரும் தேசிய நெடுஞ்சாலை யில் சிப்காட் நுழைவாயில் எதிரில் சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் பெரிய பள்ளம் உள்ளது.

இதில் மழை பெய்யும் போது மழை நீர் தேங்கியும் வருகிறது.

இதனால் இந்த சாலையில் செல்லும் பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் ஓவர் டேக் எடுக்கும்போது, பக்கவாட்டில் செல்லும் இருசக்கர வாகனங்கள், தங்கள் மீது மோதாமல் இருந்த அந்த பள்ளத்தில் இறங்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் சில இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் வி ரைவாக நடவடிக்கை எடுத்து சாலை ஓரத்தில் உள்ள பள்ள த்தை மூட வேண்டும் என்பது இருசக்கர வாகன ஓட்டிகள் வேண்டுக்கோளாக உள்ளது.

Tags:    

Similar News