காவிரி ஆற்றில் குதித்த வாலிபர் கதி என்ன?
- பவானி அருகே உள்ள லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் வழியாக வந்து கொண்டு இருந்தனர்.
- அப்போது விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளை ஓரத்தில் நிறுத்தி விட்டு திடீரென மனைவி கண் முன்னே புதிய காவிரி ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார்.
பவானி:
திருப்பூருரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (38). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் அயன் செய்யும் காண்டி ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.
இவர் பெங்களூரை சேர்ந்த சந்தியா என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவர்க ளுக்கு லாவண்யா என்ற 7 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறபபடுகிறது. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ெதாடர்ந்து தகராறு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திருப்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் விஸ்வநாதன் தனது மனைவிக்கு கவுன்சி லிங் தர தரக்கோரி புகார் அளித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மனைவி சந்தியா பெங்களூர் சென்று வருவதாக கூறி னார்.
இதையடுத்து மனைவி யை விசுவநாதன் பெங்களூ ரில் விட்டு விட்டு வருவதாக கூறினார். இதை தொடர்ந்து கணவன்- மனைவி மற்றும் மகள் என 3 பேரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூருவுக்கு சென்ற னர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வரும் போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரி கிறது.
இந்த நிலையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் வழியாக வந்து கொண்டு இருந்தனர். அப்போது விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளை ஓரத்தில் நிறுத்தி விட்டு திடீரென மகைவி கண் முன்னே புதிய காவிரி ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார்.
இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தீய ணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து குமாரபாளையம் தீய ணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் அவரை தேடினர்.
இதை தொடர்ந்த இன்று தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் இன்று 2-வது நாளாக காவிரி ஆற்றில் விஸ்வநாதனை தேடி வரு கிறார்கள். அவரது கதி என்ன என தெரியவில்லை.