உள்ளூர் செய்திகள்

796 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

Published On 2022-10-13 15:16 IST   |   Update On 2022-10-13 15:16:00 IST
  • கொடுமுடி அருகே எழுநூத்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குப்பம் பாளையத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.
  • முகாமிற்க்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார்.

கொடுமுடி:

கொடுமுடி அருகே எழுநூத்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குப்பம் பாளையத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

முகாமிற்க்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். தாசில்தார் மாசிலாமணி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சந்ேதாஷினி சந்திரா, ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 108 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, ரேசன் கார்டு, விதவைகள் மற்றும் முதியோர் உதவித்தொகை தலா 30 பேர் என மொத்தம் 796 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 42 ஆயிரத்து 221 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கணேசமூர்த்தி எம்.பி., சரஸ்வதி எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் கெட்ஷி லீமா அமாலினி, மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி செந்தில்குமார் உள்பட பலர் கலந்த கொண்டர்.

விழாவிற்கான எற்பாடுகளை மண்டல தாசில்தார் பரமசிவன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News