உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாநகரில் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராவுடன் கோபுரம் அமைப்பு

Published On 2022-10-11 07:55 GMT   |   Update On 2022-10-11 07:55 GMT
  • தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
  • இதன்படி மாநகரில் மக்கள் கூடும் 6 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு:

தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் தற்போதே புத்தாடைகள்-நகைகள் வாங்க கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை சாலையின் இருப்புறமும் ஏராளமான ஜவுளி கடை கள் உள்ளன. இதேபோல் ஆர்.கே.வி. ரோடு பகுதி களில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. ஈஸ்வ ரன் கோவில் வீதிகளிலும் ஜவுளி கடைகள் உள்ளன.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து நகை, பணத்தை திருடும் கும்பல் கைவரிசை காட்ட கூடும் என்பதால் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி மாநகரில் மக்கள் கூடும் 6 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி மணிக்கூண்டு பகுதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, பன்னீர்செல்வம் பார்க், காளை மாடு சிலை, முனிசிபால் காலனி பகுதி, பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த கண்காணிப்பு கோபுரங்களில் சி.சி.டி.வி. கேமிராவும் பொருத்த ப்பட்டு கண்காணி க்கப்படுகிறது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணியாற்று வார்கள். கூட்டங்களை கண்காணி த்தல், பொதுமக்கள் நடவடிக்கையை துல்லி யமாக இந்த கண்காணிப்பு கேமிராக்கள் பதிவு செய்யும்.

இதேப்போல் கிருஷ்ணா தியேட்டர் பகுதி, பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் பெரிய அளவில் எல்.இ.டி. டிஜிட்டல் திரை அமைத்து விழிப்புணர்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News