உள்ளூர் செய்திகள்

சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்

Published On 2023-09-22 15:18 IST   |   Update On 2023-09-22 15:18:00 IST
  • வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
  • வேனில் இருந்தவர்களுக்கு சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

கொடுமுடி:

தேனியில் இருந்து ஒரு சுற்றுலா வேனில் பெரியவ ர்கள் 18 பேர், ஒரு குழந்தை உட்பட 19 பேர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர்.

இவர்கள் நேற்று இரவு கொடுமுடி மகுடே ஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு பவானி சங்மே ஸ்வரர் கோவிலுக்காக வேனில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இரவு 8.30 மணி அளவில் கருவேலம்பா ளையம் என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்த போது ரோட்டின் குறுக்கே நாய் ஒன்று ஓடியுள்ளது.

அதன்மீது வேன்மோதாமல் இருப்பதற்காக முயற்ச்சித்போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்தவர்களுக்கு சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். வேன் கவிழ்ந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ்சுகள் அங்கு காயம்பட்டிருந்தவர்களை அழைத்துக் கொண்டு கொடுமுடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற காயம்பட்டவர்கள் பின்னர் அங்கிருந்த தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இரவோடு இரவாக கவிழ்ந்த வேனையும் அவர்கள் மீட்பு வாகனம் மூலம் எடுத்து சென்றனர்.

Tags:    

Similar News