மடிக்கணினி, செல்போன் திருடியவர்கள் கைது
- மடிக்கணினி, செல்போன் திருடியவர்கள் கைது செய்யபட்டனர்
- போலீசார் ரெயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்த னர்.
ஈரோடு:
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அமல்தேவி (வயது 36). இவர் கடந்த 16-ந் தேதி கொச்சுவேலி-மைசூர் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து ள்ளார். அப்போது அவர் வைத்திருந்த பேக்கை காண வில்லை. அதில் ரூ.1 லட்ச த்து 13 ஆயிரம் மதிப்புள்ள 2 மடிக்கணினிகள் மற்றும் 2 செல்போன்கள் இருந்து ள்ளது. பின்னர் இதுகுறித்து அமல்தேவி ஈரோடு ரெயில்வே காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குபதிவு செய்து பேக்கை திருடிய மர்ம நப ர்களை தேடி வந்தார்.
இந்நிலையில் போலீசார் ரெயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்த னர். விசாரணையில் பேக்கை திருடியது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த ஆரோ க்கிய ஜேசுராஜ் (33) மற்றும் திருப்பூர் வி.ஓ.சி நகரை சேர்ந்த பாண்டியராஜன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் திருடிய மடி க்கணினி மற்றும் செல்போ ன்களை பறிமுதல் செய்தனர்.