உள்ளூர் செய்திகள்

ஒரத்துப்பாளையம் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு

Published On 2022-11-13 15:00 IST   |   Update On 2022-11-13 15:00:00 IST
  • சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து உள்ளது.
  • அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. 40 அடி உயரம் உள்ள இந்த அணையில் கடந்த சில நாட்களாக 5 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. மேலும் அணைக்கு நீர்வரத்தும் குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீர் பிடிப்பு பகுதியான கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஒரத்து ப்பாளையம் அணைக்கு நீர்வரத்து 204 கன அடியில் இருந்து 1,193 கன அடியாக உயர்ந்தது.

நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று (சனிக்கிழமை) மாலை அணையின் நீர்மட்டம் 15 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்து உள்ளது.

ஆனால் மாலை 5 மணிக்கு மேல் அணைக்கு வரும் நீரின் அளவு 578 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் நுங்கும் நுரையு மாக மழை நீர் நொய்யல் ஆற்றில் வெளியேறுகிறது. நொய்யல் ஆற்று படுகையில் வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

அணையில் இருந்து வெளியேறும் நீரில் உப்பு தன்னை 1550 டி.டி.எஸ்., என்ற அளவில் இருந்து தற்போது 1050 என்ற அளவில் குறைந்து உள்ளது. இன்னும் உப்பு தன்மை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News