உள்ளூர் செய்திகள்

புளியம்பட்டி மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது

Published On 2023-10-26 15:16 IST   |   Update On 2023-10-26 15:16:00 IST
  • பூக்களின் விலை சரிவடைய தொடங்கியுள்ளது
  • ரூ.250 விற்ற சம்பங்கி 50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக மல்லி, முல்லை, சம்பங்கி பூக்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளையும் பூக்கள் புளியம்பட்டி பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை என தொடர்ச்சியாக விசேஷ நாட்கள் வந்ததால் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் கடந்த ஒரு வாரமாக 2 மடங்கு விலை உயர்ந்து விற்கப்பட்டது.

விசேஷ தினங்கள் முடிவடைந்ததால் பூக்களின் விலை சரிவடைய தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.ஆயிரம் முதல் 1,200 வரை விற்ற மல்லிகைப்பூ தற்போது ரூ.450 ரூபாயாக சரிந்துள்ளது. ரூ. 600-க்கு விற்ற முல்லை ரூ. 170 ரூபாயாகவும், ரூ.250 விற்ற சம்பங்கி 50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

Tags:    

Similar News