கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெயிண்டரால் பரபரப்பு
- குடித்த அதே பாட்டிலை உடைத்து அதில் தனக்கு தானே கழுத்தை அறுத்து க்கொண்டார்.
- பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் ஆலமரத்தெருவை சேர்ந்தவர் காதர். இவரது மகன் ஷாஜகான்(33). இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மரப்பாலம் நேதாஜி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்தி உள்ளார்.
போதை தலைக்கு ஏறியதும், தான் குடித்த அதே பாட்டிலை உடைத்து அதில் தனக்கு தானே கழுத்தை அறுத்து க்கொண்டார்.
இதை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
போதையில் இருந்த ஷாஜகான் சிறிது நேரத்தில் மருத்துவ மனையில் இருந்து தப்பி ரத்தம் சொட்ட சொட்ட மீண்டும் அதே டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து மீண்டும் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஈரோடு டவுன் போலீசார் விசா ரணை நடத்தியதில் ஷாஜகான் இதற்கு முன்பு 5 முறை இதே போன்று கழுத்தை அறுத்துக்கொண்டதும், குடிபோதையில் இது போல செய்து கொள்வதும் தெரியவந்தது.
இதனிடையே ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாஜகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.