ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம்
- அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 132 ஒப்பந்த பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒப்பந்தம் பெறும்போது அரசுக்கு உறுதியளித்த படியும், ஈரோடு கலெக்டர் நிர்ண யித்து, அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.707 வீதம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் ஒப்பந்த நிறுவனமோ நாளொன்று க்கு ரூ.310 வீதம் மட்டுமே ஊதியம் வழங்கி வந்தது. எனவே கலெக்டர் நிர்ண யித்த குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.707 வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் போராடி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை மீண்டும் பணியில் அனுமதிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஊதி யத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த ஜனவரி 21-ந் தேதி முதல் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 25-ந் தேதி ஒப்பந்த நிறுவனம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி கள், வருவாய்க் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாள ர்களுக்கு கடந்த ஜனவரி 30-ந் தேதி முதல் மீண்டும் பணி வழங்குவதாக ஒப்பந்த நிறுவனம் உறுதியளித்தது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆனால் உறுதியளித்தபடி ஒப்பந்த நிறுவனம் தொழி லாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வில்லை. ஒப்பந்த நிறுவனத்தின் இந்த நியாயமற்ற தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், வேலை மறுக்கப்பட்ட தொழிலா ளர்கள் 6 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
தொழிலாளர் நலச் சட்டங்களின் படியான பலன்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி யும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மருத்துவத்துறை பணியாள ர்கள் சங்கத்தினர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.