உள்ளூர் செய்திகள்

திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி யாகம்

Published On 2023-06-10 07:06 GMT   |   Update On 2023-06-10 07:06 GMT
  • பகல் 1 மணி அளவில் பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணம் நடந்தது.
  • இளைஞர்கள் ஏராளமானோர் யாகத்தில் கலந்து கொண்டனர்

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் கொருமடு என்ற இடத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது.

இங்கு 27-வது ஆண்டு விழா மற்றும் திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி யாகம் நடை பெற்றது. காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் யாகம் தொடங்கியது. பகல் 1 மணி அளவில் பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணம் நடந்தது. காரைக்குடியை சேர்ந்த ஆர்.முரளி தரன் சாந்தி தம்பதிகள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்டு இருந்து பிர–மாண்ட பந்தலில் சுயம்வர பார்வதி யாகம் நடந்தது. திருமணம் ஆகாத இளம்பெண்கள், இளைஞர்கள் ஏராளமானோர் யாகத்தில் கலந்து கொண்டனர். வேதவிற்பனர்கள் சொல்வதை அவர்கள் திரும்ப கூறி வழிபட்டனர்.

இதில் ஈரோடு மட்டு மின்றி கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை மற்றும் மதியம் அன்ன தானம் வழங்கப்பட்டது.

இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களின் வசதிக்காக சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டி பாளையத்தில் இருந்து சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News