உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம்

Published On 2023-07-16 12:45 IST   |   Update On 2023-07-16 12:45:00 IST
  • ஈரோட்டில் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் 20-ந் தேதி நடக்கிறது
  • சிறப்பு முகாம் வரும் 20-ந் தேதி காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை நடக்க உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மின் பகிர்மான வட்ட, தெற்கு கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால், அதற்கான சிறப்பு முகாம் ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் (அரசு மருத்துவமனை அருகே) வரும் 20-ந் தேதி (வியாழக்கிழமை) காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை நடக்க உள்ளது. மின் நுகர்வோர், தங்களது ஆதார் எண் ஆவணம், பெயர் மாற்ற ஆவணத்துடன் உரிய கட்டணத்தை செலுத்தி, உடன் பெயர் மாற்றம் செய்யலாம்.

வீடு, கடை மின் இணைப்புக்கு வீட்டு வரி ரசீது அல்லது பத்திர நகல் அல்லது வாரிசு சான்று, இதர வாரிசுதாரர்களிடம் இருந்து ஆட்சேபனை இன்மை நகலும், தொழில் மின் இணைப்புக்கு வீட்டு வரி, பத்திர நகல் அல்லது வாரிசு சான்று, இதர வாரிசுதாரர்களிடம் ஆட்சேபனை இன்மை கடிதம், தாழ்வழுத்த ஒப்பந்த பத்திரமும், விவசாய மின் இணைப்புக்கு பத்திர நகல் அல்லது பட்டா, வி.ஏ.ஓ., உரிமை சான்று, தாழ்வழுத்த ஒப்பந்த பத்திரம் ஆகியவை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.filephoto

Tags:    

Similar News