உள்ளூர் செய்திகள்
பு.புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
- பு.புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு மகா பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் அண்ணாமலையார் உடன் உண்ணாமலை அம்மை மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.