உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக ஈரோடு பெரிய மார்க்கெட்டில் குப்பை தேங்கி கிடக்கிறது.

தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்: அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை

Published On 2023-06-29 14:44 IST   |   Update On 2023-06-29 14:44:00 IST
  • இன்று 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
  • அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படை க்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

பணி நிரந்தரம், குறைந்தபட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்பி.எப். உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் சார்பில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோகப் பணியா ளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கடந்த 23-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தை தோ ல்வியில் முடிவடைந்தது. தங்களது கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு செல்லும் வகையில் ஒவ்வொரு நாளும் தூய்மை பணியாளர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலக ங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர். நேற்று காளை மாட்டு சிலை பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இன்று 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக என்ன போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்து இன்று ஈரோடு மாவட்டம் சி.ஐ.டி.யு தலைமை அலுவலகத்தில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் ஏ.ஐ.டி.யு.சி. சின்னசாமி, சி.ஐ.டி.யு. சுப்பிரமணியம், எல்.பி.எப் கோபால் உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசித்து வருகின்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும். முன்னதாக 7-வது நாளாக குப்பை அள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மலை போல் குப்பை தேங்கி உள்ளது.

மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பை அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News