சொக்கநாச்சியம்மன் கோவிலில் கொள்ளை
- சித்தார் மேட்டூர் மெயின் ரோடு அருகில் உள்ள புளிய மரத்தின் அடியில் 2 நபர்கள் கையில் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தனர்.
- இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே சித்தார் கோம்பு தோட்டத்தில் பிரபலமான சொக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் சித்தார் மேட்டூர் மெயின் ரோடு அருகில் உள்ள புளிய மரத்தின் அடியில் 2 நபர்கள் கையில் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் நாய் ஒன்று குரைத்து கொண்டிருந்தது. அதை கண்ட அருகில் உள்ள மளிகை கடைக்காரர் கணேசன் என்பவர் எழுந்து வந்து பார்க்கையில் 2 பேரையும் யார், எந்த ஊர், இந்த நேரத்தில் எதற்காக எங்கே நிற்கிறீர்கள் என விசாரித்து கொண்டி ருந்தார்.
அப்போது அதிலிருந்து ஒருவன் நைசாக நழுவி சென்று விட்டான். சந்தேகமடைந்த கணேசன் அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் மற்றொருவனை பிடித்து கொண்டு பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ யிடம் வந்த போலீசார் அவனிடம் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த பொழுது அதில் சொக்கநாச்சி அம்மன் கோவில் கதவு மற்றும் உள்ளிருந்த பீரோவை உடைத்து திருடப்பட்ட ஒரு பெரிய குத்து விளக்கு, 2 சிறிய குத்து விளக்குகள், பித்தளைக்கூடம், செம்பு சொம்பு ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் கோவிலில் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.