உள்ளூர் செய்திகள்

வனவிலங்குகள் தாகம் தணிக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை

Published On 2023-03-07 08:21 GMT   |   Update On 2023-03-07 08:21 GMT
  • வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • விவசாயிகள் மற்றும் மன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்திய மங்கலம் மற்றும் ஆசனூர் என 2 வனக்கோட்டங்கள் உள்ளன.

இந்த 2 வனக் கோட்டங்க ளில் சத்திய மங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம் , கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதி யில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக மழை பொய்யா ததால் தற்போது மரம், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளன.

மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகள், தடுப்ப ணைகள், நீரோடைகள் மற்றும் பள்ளங்களில் தண்ணீர் வற்றியது.

இதன் காரணமாக யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு , மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்ப டுத்து வது தொடர்கதை ஆகியு ள்ளது.

கோடை காலங்களில் வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனப்பகுதியில் ஆங்காங்கே உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்புவது வழக்கம்.

தற்போது வனப்ப குதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியதால் வனவிலங்கு கள் வனப்பகு தியை விட்டு வெளியே வருவது அதிகரித்துள்ளது.

எனவே வன விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் மன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News