உள்ளூர் செய்திகள்

ரோட்டின் நடுவில் குழி

Published On 2023-09-14 15:36 IST   |   Update On 2023-09-14 15:36:00 IST
  • ரோட்டில் இருந்த பாலம் உடைந்து குழி ஏற்பட்டு விட்டது.
  • பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சென்னிமலை:

சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, அம்மன்கோவில் புதூரில் இருந்து முருங்கத்தொழுவு செல்லும் ரோட்டில் இருந்த பாலம் உடைந்து குழி ஏற்பட்டு விட்டது.

இந்த ரோட்டில் அரசு டவுன் பஸ் மட்டும் அல்லாமல், தனியார் நிறுவன கம்பெனி பஸ்கள், லாரிகள் என போக்குவரத்து மிகுந்த ரோடு. மேலும் இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் செல்கிறது. இந்த நிலையில் இந்த குழி ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

தற்போது ரோட்டின் 2 பக்கமும் குழி ஏற்பட்டு பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பஸ் போக்குவரத்து இன்றி தடுமாறி வருகின்றனர்.

மேலும் இந்த இடத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் முன்னதாவது அதிகாரிகள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News