உள்ளூர் செய்திகள்

கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்படுத்தப்படுகிறதா? என பவானி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல் சோதனை செய்த போது எடுத்த படம்.

பவானியில் கடைகளில் நகராட்சி ஆணையாளர் திடீர் சோதனை

Published On 2023-05-25 09:22 GMT   |   Update On 2023-05-25 09:22 GMT
  • திடீர் சோதனை மேற்கொண்டனர்.
  • 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பவானி:

பவானி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடை, மொத்த வியாபாரம் செய்யும் கடைகள், உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்பட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட கேரி பேக் விற்பனை செய்யப் படுகிறதா?

அல்லது பயன் பயன்படுத்தி வருகிறார்களா? என கண்டறியும் வகையில் பவானி நகராட்சி ஆணை யாளர் (பொறுப்பு) கதிர்வே ல் மற்றும் பரப்புரை யாளர்கள் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.

சோதனையில் 5 கடைகளில் சுமார் 20 கிலோ கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் இருப்பது கண்டறியப் பட்டது. அவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் 5 கடைகளுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ேமலும் தடை செய்யப்பட்ட கேரிபேக் விற்பனை செய்யப்பட்டு வருவது மீண்டும் கண்டறி யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News