உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையத்தில் மராத்தான் போட்டி

Published On 2022-06-26 07:06 GMT   |   Update On 2022-06-26 07:06 GMT
  • கோபிசெட்டி பாளையத்தில் இந்திய மருத்துவ சங்க கோபி கிளை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மராத்தான் போட்டி நடைபெற்றது.
  • இந்த மராத்தான் ஓட்டத்தில் 10 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கோபி, ஜூன். 26-

கோபிசெட்டி பாளையத்தில் இந்திய மருத்துவ சங்க கோபி கிளை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மராத்தான் போட்டி நடைபெற்றது.

கரட்டடிபாளையத்தில் தொடங்கிய மராத்தான் போட்டியை கோபி டி.எஸ்.பி ஆறுமுகம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கரட்டடிபாளையத்தில் தொடங்கி லக்கம்பட்டி, நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி, கச்சேரிமேடு, பஸ் நிலையம், மேட்டுவலுவு, முருகன்புதூர், சாணார்பதி வழியாக பாரியூர் சென்று முருகன்புதூரில் உள்ள பி.கே.ஆர். மகளிர் கல்லூரி வரை நடைபெற்றது.

இந்த மராத்தான் ஓட்டத்தில் 10 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த மராத்தான் போட்டியில் மாணவ மாணவிகளுக்கான பெண்கள் பிரிவில் 10 கிலோமீட்டர் தூரம் ஓடி கோபி கலை அறிவியில் கல்லூரியை சேர்ந்த திவ்யா முதல் இடமும், பி.கே.ஆர் கல்லூரியை சேர்ந்த மாணவி சவிதா 2-ம் இடமும், கோவை மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுஸ்ரீ என்ற மாணவி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

5 கிலோ மீட்டர் பிரிவில் நகலூர் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தருணா முதல் இடமும், பவித்ரா 2-ம் இடமும், ரீனா என்ற மாணவி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

ஆண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டர் பிரிவில் கோபி கலை அறிவியியல் கல்லூரியை சேர்ந்த நிசாந்குமார் மற்றும் மாதவன் முதல் 2 இடங்களையும், நகலூர் ஸ்போர்ட் அகாடமியை சேர்ந்த மாணவர் சிவா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

அதேபோல 5 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் கோபிகலை அறிவியல் கல்லூரி மாணவர் ஆகாஷ் முதல் இடமும், எடப்பாடி ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தேசிகன் 2-ம் இடத்தையும், ஈரோடு இந்திய அத்தலடிக் கிளப்பை சேர்ந்த கவுதம் 3-ம் இடத்ததையும் பிடித்தனர்.

பொது பிரிவில் 10 கிலோ மீட்டர் பிரிவில் ஈரோடு பகுதியை சேர்ந்த ரகுபதி, யசரப்த் ஆகியோர் முதல் 2 இடங்களையும், தவசியப்பன் 3-ம் இடத்தையும் பிடித்தனர்,

5 கிலோ மீட்டர் பிரிவில் ஈரோடு பகுதிகளை சேர்ந்த சீனிவாசன், சசிகுமார், கார்த்தி உள்ளிட்டவர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News