உள்ளூர் செய்திகள்

அழுகிய நிலையில் ஆண் உடல்

Published On 2023-10-30 15:48 IST   |   Update On 2023-10-30 15:48:00 IST
  • 50 முதல் 55 வயது வரை மதிக்கத்தக்க ஆண் உடல் கரை ஒதுங்கிக் கிடந்தது
  • உடல் அழுகிய நிலையில் இருந்தது

ஆப்பக்கூடல்,

ஈரோடு மாவட்டம், அத்தாணி, காமராஜபுரம் அருகே உள்ள பவானி ஆற்றின் வடக்கு கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக குப்பாண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவல ராகப் பணியாற்றி வரும் விஜயகுமாருக்கு (41) நேற்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கிராம நிர்வாக அலுவலர் விஜய குமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டதில், சுமார் 50 முதல் 55 வயது வரை மதிக்கத்தக்க ஆண் உடல் கரை ஒதுங்கிக் கிடந்தது.

சடலமாக கிடந்தவர் பச்சை கலர் கோடு போட்ட அரைக்கை சட்டையும், சிவப்பு கலர் அரைஞாண் கயிறும் அணிந்திருந்தார்.

இடது கை நடு விரலில் கருப்பு வளையம் அணிந்து இருந்தார். இடது கையில் சிவப்பு கயிறும், வலது கையில் பச்சை கயிறும் கட்டி இருந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர், யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News