உள்ளூர் செய்திகள்

லாரி டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

Published On 2022-10-11 14:08 IST   |   Update On 2022-10-11 14:08:00 IST
  • ராஜா உறவினரின் மகளான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
  • அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ஈரோடு:

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் ராஜா (34). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் ஆர். என். புதூரில் உறவினர் வீட்டில் நடைபெற்ற விருந்துக்கு ராஜா வந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த உறவினரின் மகளான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை மிரட்டி உள்ளார்.

இதற்கு பயந்து அந்த மாணவியும் இந்த விஷயத்தை வெளியே கூறவில்லை. இந்நிலையில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து மாணவி நடந்த விஷயத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி இன்று தீர்ப்பளித்தார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு 20 வருட சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபாரதம் விதித்து தீர்ப்பளி த்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார். இந்த இழப்பீட்டு தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News