உள்ளூர் செய்திகள்

ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் அளவீடு

Published On 2022-10-14 09:50 GMT   |   Update On 2022-10-14 09:50 GMT
  • செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் 90 சென்ட் நிலங்களை அளவீடு செய்ய ரோவர் கருவி மூலம் சேட்டிலைட் சர்வே அளவீடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • இந்த பணியில் செல்லியாண்டியம்மன் கோவில் செயல் அலுவலர் பிரேமா, நில அளவையாளர்கள் கார்த்தி, அருள் மற்றும் கோவில் பணியாளர்கள் என பலர் ஈடுபட்டு உள்ளனர்.

பவானி:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழக கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு படி பவானி செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமாக செங்காடு, சொக்காரம்மன் காடு மற்றும் திருவள்ளுவர் நகர் போன்ற பகுதியில் சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் 90 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்தினை அளவீடு செய்திட செல்லியாண்டியம்மன் கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

பவானியில் உள்ள ஆலய நிலங்கள் மீட்பு பணி மேற்கொள்ள ஓய்வு பெற்ற தாசில்தார் பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் 90 சென்ட் நிலங்களை அளவீடு செய்ய ரோவர் கருவி மூலம் சேட்டிலைட் சர்வே அளவீடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் செல்லியாண்டியம்மன் கோவில் செயல் அலுவலர் பிரேமா, நில அளவையாளர்கள் கார்த்தி, அருள் மற்றும் கோவில் பணியாளர்கள் என பலர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த அளவீட்டு பணிகள் முடிவடைந்த பின்னர் ஆக்கிரமிப்புகள் செய்திருப்பது கண்டறியப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த பின்னர் தமிழக அரசு உத்தரவு பெற்று ஆக்கிரமிப்பு இடத்தினை அகற்றப்பட்டு இந்து அறநிலைத்துறை மூலம் எல்லை கற்கள் நடப்பட உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News