உள்ளூர் செய்திகள்

கொங்காலம்மன் கோவில் தைப்பூச தேரோட்டம்

Published On 2023-02-05 13:34 IST   |   Update On 2023-02-05 13:34:00 IST
  • கொங்காலம்மன் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடை பெற்றது.
  • இதைத்தொடர்ந்து நாளை அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும், 108 வலம்புரி சங்கு அபிஷேகம், தெப்ப உற்சவமும் நடக்கிறது.

ஈரோடு:

ஈரோடு கொங்காலம்மன் கோவில் தைப்பூச தேர் திருவிழா கடந்த 27-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி யது. 28-ந் தேதி கொடி யேற்றமும். கிராம சாந்தியும் நடை பெற்றது.

இதை தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது.

இதையொட்டி கொங்காலம்மன் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடை பெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கொங்காலம்மன் கோவிலில் இருந்து தொட ங்கிய தேரோட்டம் ஆர்.கே. வி. ரோடு, மணிக்கூண்டு, மண்டபம் வீதி, பெரியார் வீதி, காரை வாய்க்கால் கோவில் பகுதி, கச்சேரி வீதி, பன்னீர்செல்வம் பார்க் வழியாக கோவிலை வந்தடைந்தது.

தேரோட்ட விழாவில் இந்து அறநிலைய துறை உதவி ஆணையாளர் அன்ன க்கொடி, செயல் அலுவலர் முத்துசாமி. லட்சாதிபதி பூண்டு மண்டி சரவணகுமார், கார்த்திகேயன், பழனியப்பா செந்தில்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .

லட்சாதிபதி பூண்டு மண்டி சார்பில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாளை அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும், 108 வலம்புரி சங்கு அபிஷேகம், தெப்ப உற்சவமும் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்

விழாவையொட்டி மாதுவின் கொங்கு ஆர்கெஸ்ட்ரா இசை கச்சேரி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News