கோபி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை
- கோபி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை போனது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.
கோபி,
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங் கோவில் பகுதியை சேர்ந்த வர் ராமசாமி (வயது 64). விவசாயி. இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகே உள்ள மாடி படி கட்டின் அருகே வைத்து விட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். இதையடுத்து அவர் மறு நாள் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவில் வைத்து இருந்த ரூ.3 ஆயிரம் பணம் மற்றும் 20 பவுன் நகையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபர்கள் மாடி படியில் வைத்து இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோ வில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் வீட்டின் சாவியை பக்கத்து மாடியில் எரிந்து விட்டு சென்று உள்ளனர். இது குறித்து ராமசாமி சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.