உள்ளூர் செய்திகள்

மாநகரில் குவிந்த குப்பை கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்

Published On 2022-10-06 10:11 GMT   |   Update On 2022-10-06 10:11 GMT
  • மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.
  • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

ஈரோடு:

ஈரோடு மாநகரில் கடந்த 4-ந் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட ப்பட்டது. முன்னதாக மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சா லைகள், அலுவலகங்கள், கடைகள், வீடுகள், வாகன ங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் குப்பை கழிவுகளை நேரடியாக பெற மாநகராட்சி சார்பில் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.

மேலும் மாநகரில் பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைக்காக சாலையோரம் தற்காலிக கடை அமைத்த வியாபாரிகள் சிலர் விற்பனையாகாத வாழைக்கன்று, பூசணிக்காய், மா இழை போன்றவற்றை அப்படியே சாலையோ ரங்களில் வீசி சென்றுள்ளனர்.

இதையொட்டி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இது தொடர்ந்து இன்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நான்கு மண்டங்களிலும் குவிக்க ப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி வருகின்றனர். டன் கணக்கில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றி வருகின்றனர்.

Tags:    

Similar News