உள்ளூர் செய்திகள்

சென்னிமலையில் ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர்

Published On 2023-10-04 09:42 GMT   |   Update On 2023-10-04 09:42 GMT
  • ஆசிரிய, ஆசிரியைகள் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பயிற்சியில் பங்கேற்றனர்.
  • ஆசிரியர்களை முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும்.

சென்னிமலை:

சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பல்வேறு ஆசிரியர்கள் அமைப்பினர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியராக பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஒரே பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்த ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு நடந்த எண்ணும், எழுத்தும் பயிற்சியில் பங்கு பெற்ற ஆசிரிய, ஆசிரியைகள் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பயிற்சியில் பங்கேற்றனர்.

பயிற்சிக்கு முன்பாக வளாகத்தில் திரண்டு கோஷம் எழுப்பிய ஆசியர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக போராடும் ஆசிரியர்களை முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும், கோரிக்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறினர்.

Tags:    

Similar News