உள்ளூர் செய்திகள்
மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை
- மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்
ஈரோடு,
ஈரோடு, கருங்கல்பாளையம், சொக்காய் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவரது மனைவி விசித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து மனைவி விசித்ரா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு கவனித்து வந்த மணிகண்டன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் கழிப்பறையில் சேலையால் தூக்கிட்டு மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.