உள்ளூர் செய்திகள்

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.4 லட்சம் ேமாசடி

Published On 2023-02-21 09:34 GMT   |   Update On 2023-02-21 09:34 GMT
  • வேலை வாங்கி தருவதாக கூறி சரஸ்வதியுடம் மோசடி ெசய்தது தெரிய வந்தது.
  • இது குறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.

பவானி:

பவானி மேற்கு தெரு 3-வது வீதிைய சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சரஸ்வதி. பவானி கீரைக்கார வீதியை சேர்ந்தவர் முகமது. இவரது மகன் சலீம் (28).

இந்த நிலையில் சலீம், சரஸ்வதியிடம் ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவி அலுவலர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இைதயடுத்து சலீம் பல மாதங்களாகியும் வேலை வாங்கி தரவில்லை எனவும், சரஸ்வதி, சலீமிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும் அவர் கொடுக்க வில்லை என சரஸ்வதி புகார் கூறினார்.

இது குறித்து சரஸ்வதி பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். இதில் சலீம் ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவி அலுவலர் பணி வேலை வாங்கி தருவதாக கூறி சரஸ்வதியுடம் மோசடி ெசய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் மோசடி செய்த குற்றத்தி ற்காக சலீமை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ேபாலீசார் பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News