உள்ளூர் செய்திகள்

களப்பயணம் மேற்கொண்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள்

Published On 2022-12-09 10:27 GMT   |   Update On 2022-12-09 10:27 GMT
  • மாணவ, மாணவிகள் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்
  • மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம் முறைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

பெருந்துறை,

இந்திய அரசியலமைப்பு நாள் மற்றும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு பெருந்துறை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

அங்கு பெருந்துறை சார்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண பிரியா, குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி, அரசு வக்கீல் திருமலை மற்றும் பெருந்துறை நீதிமன்ற சிராஸ்தார் கல்யாணசுந்தரம் ஆகியோர் மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடி மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம் முறைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் ஆசிரியர்கள் கோபிநாத், வெங்கடாஜலபதி, சுமதி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தீபக்ராஜ் மற்றும் தினேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News