உள்ளூர் செய்திகள்
மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி
- மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியத்தின் மீது மோதியது.
- சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை, நவ.8-
சென்னிமலை அருகே உள்ள தட்டாங்காட்டு புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். (வயது 79). விவசாயி. இவர் தன்னுடைய வீட்டில் இருந்து அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்றார்.
அப்போது சென்னிமலை-காங்கேயம் மெயின் ரோட்டை அவர் கடந்த பொழுது ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்த கவின் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியத்தின் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கவினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.