உள்ளூர் செய்திகள்

உணவு தேடி கூட்டமாக வந்த யானைகள்

Published On 2023-02-10 15:23 IST   |   Update On 2023-02-10 15:23:00 IST
  • வனப்பகுதியில் இருந்து யானைகள் தண்ணீரை தேடி வெளியேறி கூட்டமாக பவானிசாகர் அணைக்கு வந்தது.
  • இந்த யானைகள் கூட்டமாக வந்ததை கண்ட அந்த பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், பண்ணாரி மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் யானைகள் உள்பட பல வன விலங்குகள் உள்ளன.

இந்த வனப்பகுதிகளில் இருந்து யானைகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வெளியேறி அடிக்கடி கூட்டமாக ரோட்டில் உலாவி வருகிறது. மேலும் அருகே உள்ள கிராம பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.

இதே போல் பவானி சாகருக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் யானைகள் பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு தண்ணீரை தேடி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த யானைகள் கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீரை தேடி வெளியேறி கூட்டமாக பவானிசாகர் அணைக்கு வந்தது. அந்த யானைகள் அணை பகுதி யில் சிறுது நேரம் உலாவி கொண்டே இருந்தது.

இந்த யானைகள் கூட்ட மாக வந்ததை கண்ட அந்த பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அருகே உள்ள பூங்கார் கிராம குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுமோ என ஒரு வித அச்சத்துடன் இருந்தனர்.

யானைகள் ஊருக்குள் புகாதவாறு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யானைகளை பவானிசாகர் வனப்பகுதிக்கு விரட்டுமாறு பவானிசாகர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News