உள்ளூர் செய்திகள்

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-28 11:43 IST   |   Update On 2023-05-28 11:43:00 IST
  • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
  • இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

கோபி:

அ.தி.மு.க. சார்பில் தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (29-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் ரோட்டில் உள்ள ஜியான் தியேட்டர் முன்பு நாளை (29-ந் தேதி) காலை 9 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் நடக்கிறது. இதில் பவானி சாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News